வாலிப நண்பனே எழுந்து வா

 

வாலிப நண்பனே(நங்கையே) எழுந்து வா

இயேசுவிடம் இன்றே வா

 

உன்வாழ்வை என்றும் அழகாய் வனைவார்

உந்தன் காரியம் நேர்த்தியாய் செய்வார்

உந்தனின் எதிர்காலம் ஜெயம் ஜெயமே

 

காண்பதெல்லாம் மெய்யென்று நம்பாதே நண்பா

கண்காணும் காட்சிகள் எல்லாமே மாயை

விழிகளின் பிரியம் அழித்திடுமே

வீழ்ந்திடாதே! அழிந்திடாதே! வாலிபனே! வாலிபனே!

 

சிறகடித்து பறக்க சிந்திக்கும் வயது

சின்றின்ப ஆசையால் அலைபாயும் மனது

வேடன்  வலையை விரித்திடுவான்

வீழ்ந்திடாதே! அழிந்திடாதே! வாலிபனே! வாலிபனே!

 

எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தை நம்தேவன் வைத்தார்

எல்லாமே நன்மையாய் உன்வாழ்வில் செய்வார்

கர்த்தரின் வேளைக்காய்; பொறுமையுடன்

காத்திரு நீ! ஜெபித்திரு  நீ! வாலிபனே! வாலிபனே!